Tuesday 13 September 2011

சிணுங்களில் கூட சித்திரம் படைத்திடும்
உன் கண்களில்
சாரலாய் இணைக்கபடுகின்றது
உன் புன்னகை
மழை தீட்டும் ஓவியம் ....முதல் முறை பார்க்கின்றேன்
தென்றல் வீசவே
சருகாய் உலருது என் இதயம்

Thursday 8 September 2011

காமம் காதலாகும் பொழுது .....


ஊடுருவி செல்லும் பார்வையில்

ஆயிரம் அர்த்தங்கள் இருந்தாலும்

ஏனோ உன் கண்களை பார்க்கையில் குருடனாகி போகின்றேன்

அனலாய் உன் மூச்சு காற்று என் தேகத்தை எரிக்கையில்

குளிரை பரப்பும் உன் முத்தங்கள்

தொடுதல் தேடுதலையாய் முடிந்திடுமோ என்ற அச்சம்,

தேடுதல் தொடுதலுக்கு மட்டும் , தொடர்வதற்கு அல்ல என்று ...

ஆண்மைக்கு தெரிந்தது ஆளுமைக்கு தெரியவில்லை

என் செய்வது என்னுள்ளும் சலனம் ...

ஆறரிவோடு பிறந்துவிட்டேன்

உள்ளுணர்வாய் தொடர்வதற்கு என்னுள் ஒன்றும் இல்லை

ஏனோ இத்தனை ஆத்மாக்கள் ...

இருக்கையில்

உன்னை பற்றிய தேடல் மட்டும் நிற்பதில்லை

Friday 18 February 2011

கனவின் காதல்

கிளைகளின் நெரிசலில்
மெல்லிடை காற்றும் வெண்மதி இரவும்
கனவுலகத்தை கொடுத்திட
இச்சை அல்ல
இது பித்துக்காதல் என
கூடி பிணைந்தன இரண்டு கனவுகள்
ஆண் கனவு கேட்டது
என்னை அல்லாது பிறரை நினைத்து பார்ப்பதுண்டா
பெண் கனவு சொல்லிற்று
மூளைக்கும் மனதிற்க்கும் தான் சந்தேகம் இவற்றிர்க்கு அப்பாற்பட்ட கனவிற்க்கும் கூடவா ??
வேடிக்கையாய் ஒருவன் சுற்றி வந்தால்
அது வாடிக்கையாய் போய்
எங்கே
என் காதல் கனவு பொய்த்திடுமோ
என்ற அச்சத்தில் தான் - ஆண் கனவு
காதல் அல்ல
காமம்
தன் தலை கொணர்வதால் வரும்
குழப்பம் இது - பெண் கனவு
காமம் தான்
நான் கொண்ட காதலின் மேல் காமம் ,
அதன் மிகுதியால் ஏற்பட்ட
சஞ்சலம் - ஆண் கனவு
பெண் கனவோ - உடல் உறங்கி போனாலும்
இடைவிடாத மூட்சைப்போல் ,
நான் களைந்து சென்றாலும்
களையாது நினைவில் பதியும்
என் காதல்
சிறகொடிந்த பறவை
பறப்பதை விட்டுவிடுவதில்லை
மாறாக சிறகடிக்க துடிக்கும்
அது போல
ஒவ்வொரு இரவில் களைந்து சென்றாலும்
உள்ளுணர்வால்
என் காதல்
உன்னையே நினைத்து
மீண்டும் மீண்டும் உன்னையே அடைய முற்படுகிறது
ஆகாயம் பரந்த ஆலமரத்தை விழுது தாங்கிகொள்வதை போல ,
வருடி செல்லும் என் காதலை நினைவுகள் ஏந்தி கொள்கின்றன
இரு மனம் ஓர் உடல் நிலையில்
ஆண் காமத்தால் காதல் வயப்பட முனைகிறான்
பெண்ணோ காதலால் காமத்தை வென்றிட தன்னை இளைக்கின்றால்

சிறு பொய்யை கூட பிழையாக சொல்லி திரிந்தேன்
வார்த்தை தெரியாததாலா ??
வாழ்க்கையே தெரியாததால் !!
பிழைக்கும் பிளைபிர்க்கும் இடையே என் காதல் சடலமாய்
பிழையாய் நீ பிளைக்கத்தெரியதவனாய் நான்
பாவம் என் காதல் என்ன தீங்கு இளைத்தது
அட்சதை என நினைத்தேன்
வாய்கரிசி என சொன்னாய்
என் பிண்டம் அப்பண்டமாய் உயிர் விட்டது

Friday 7 January 2011

மூச்சின் இடைவெளியில்
மாட்டிக்கொண்டது
என் காதல்
மூச்சும் நிற்கவில்லை
என் நெஞ்சின் முனங்களும் நிற்கவில்லை
ஏனோ என்னை சுற்றி அனைத்தும் இயங்கவில்லை
என் காதல்
உன்னை சுற்றுவதை நிறுத்தாததால்

Tuesday 23 March 2010

தேடல்

காண முடியாத அதிசயம்
சொல்ல முடியாத ரகசியம்
புள்ளியாய் உதித்து பின் அண்டமாய் விரியும்
ஆழ்மனதின் போராட்டம்
தேடல் !!!

Monday 9 February 2009

காதல் -

பத்து விரல் இடைவேளையில்
பனிப்போர் நடக்கும்
தேடலின் வேதனை 
ஆரம்பமாக 
இன்பத்தின் எல்லை 
இதோ
ஊமை விழிகள் 
பேசும் வார்த்தை தான் எத்தனை
புரியாத காதல் மொழியில் 
புதிதாக உணரும் காவியம் தான் எத்தனை 
அத்தனையும் உயிரற்று போயின 
என்னுள் 
உந்தன் காதல் உயிர் பெற்றதால்