Monday, 9 February 2009

காதல் -

பத்து விரல் இடைவேளையில்
பனிப்போர் நடக்கும்
தேடலின் வேதனை 
ஆரம்பமாக 
இன்பத்தின் எல்லை 
இதோ
ஊமை விழிகள் 
பேசும் வார்த்தை தான் எத்தனை
புரியாத காதல் மொழியில் 
புதிதாக உணரும் காவியம் தான் எத்தனை 
அத்தனையும் உயிரற்று போயின 
என்னுள் 
உந்தன் காதல் உயிர் பெற்றதால்

Saturday, 24 January 2009

கடவுள்

எண்ணில் அடங்கா ஆச்சர்யங்களை

ஆராய்ந்திட நாத்திகத்தால்

உருவாக்கபட்ட ஆத்திகத்தின் 

மூலவடிவம்

பொருள் -

புரிந்திட முற்ப்பட்டு 

புரியாத முடிவுகளாய் 

மறுமுறை தோன்றும் 

விடையின் கேள்வி

உயிர்

ஐம்பூதங்களின் நிஷ்டையால்

வாழ்க்கையின் பொருளை

அறிந்திட உருவாக்கபடும்

அண்டம்.